ஆட்டோ திருடிய 5 சிறுவர்கள் கைது

ஏழுகிணறு, ஏழுகிணறு தெருவைச் சேர்ந்தவர் அபுதாஹிர், 63; ஆட்டோ டிரைவர். கடந்த 25ம் தேதி இரவு, இவரது ஆட்டோ திருட்டு போனது. இது குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரித்த 17 வயது சிறுவர்கள் இருவர்; 15 வயது சிறுவர்கள் இருவர், 16 வயது சிறுவன் உள்ளிட்ட ஐவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். நேற்று சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *