கூவம் ஆற்றில் மூழ்கி டூ- வீலர் மெக்கானிக் பலி

ஆவடி, ஆவடி காமராஜர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 45 ; டூ- வீலர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சாந்தி, 44. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சென்னை புதுப்பேட்டை செல்வதாக கூறி சென்ற ரமேஷ் வீடு திரும்பவில்லை

புகாரின் படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், இரவு 7:00 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை சென்னையில் இருந்து வந்த மெரினா மீட்பு படையினருடன், ஆவடி தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். கூவம் ஆறு முழுதும் ஆகாய தாமரை படர்ந்து இருந்தது. இதனால், ரமேஷை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து தீவிர தேடுதலுக்கு பின், நேற்று பகல் 12:45 மணியளவில் ஆகாய தாமரை அடியில் மிதந்து கொண்டிருந்த ரமேஷ் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர். ஆவடி போலீசார், அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *