ஏரிக்கரை சாலையில் பற்றி எரிந்த தீ

சித்தாலப்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சித்தாலப்பாக்கம். இங்கு, 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி மேடவாக்கம்- -மாம்பாக்கம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த, ஏரிக்கரை ஓரம் 1கி.மீ துாரத்திற்கு குப்பை, கட்டட, இறைச்சி கழிவுகளை கொட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழிலில் வெளியானது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:

பரங்கிமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் ‘தினமலர்’ செய்தியை சுட்டிகாட்டி கேட்டபோது, அவர் சித்தாலப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு, குப்பைகளை அகற்றுமாறு கூறினார்.

ஆனால் குப்பை அகற்றாமல் தீ வைத்துள்ளனர். இதனால், எழுந்த புகையால், குறிப்பிட்ட பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ‘ தீயை அணைத்து, குப்பையை அகற்றுவதாக’ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *