தொழிலாளர்களிடம் பணம் பறித்த சிறுவன் உட்பட மூவர் கைது
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அனருல் அலி, 18, துலால், 18, ஆகிய இருவரும், டி.பி.சத்திரத்தில் தங்கி, கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலையில் உள்ள சிக்கன் உணவகத்தில் பணியாற்றுகின்றனர்.
இருவரும், கடந்த 20ம் தேதி இரவு, வேலை முடிந்து உணவு பாத்திரங்களை ட்ரை சைக்கிளில் எடுத்துக் கொண்டு, அறைக்கு சென்றனர்.
அப்போது, காமராஜர் நகர் ரேஷன் கடை அருகே நின்ற மூவர், இவர்களை வழிமறித்து, பணம் கேட்டு தகராறு செய்தனர். கொடுக்க மறுத்த இருவரையும் தாக்கி பணத்தைப் பறித்து தப்பினர்.
இது குறித்து, டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்து, வழிப்பறியில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம், காமராஜர் நகரை சேர்ந்த ராகேஷ், 23, பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா, 23, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
விசாரணைப் பின், இருவர் சிறையிலும், சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.