சுற்றுலா வேன் டயர் வெடித்து சென்னையை சேர்ந்த 17 பேர் காயம்
ஆம்பூர், மார்ச் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றபோது, வேன் முன்பக்க டயர் வெடித்து, சாலையில் கவிழ்ந்ததில், 17 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த 17 பேர் ஒகேனக்கல்லுக்கு, நேற்று காலை ‘மகேந்திரா’ வேனில் சென்று கொண்டிருந்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீரவர் கோவில் அருகே, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேன் சென்றபோது முன் பக்க டயர் வெடித்தது.
இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை நடுவே கவிழ்ந்தது. அங்கிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் காயமடைந்த 17 பேரையும் மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.