பைக்குக்கு தீ வைத்த வாலிபர் கைது
பெரம்பூர்,பெரம்பூர், வடிவேல் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜெகதீசன், 70; தனியார் நிறுவன காவலாளி
மூன்று மாதத்திற்கு முன், தன் வீட்டின் ஒரு பகுதியை, பாலாஜி, 27 என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாததால், வீட்டை காலி செய்ய வைத்துள்ளார்
இந்நிலையில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஜெகதீசனின் பைக்கிற்கு, பாலாஜி நேற்று முன்தினம் தீ வைத்துள்ளார்.
இதைப் பார்த்த ஜெகதீசன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர். செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜியை கைது செய்தனர்.