பெருங்குடியில் ஜெமினி சர்க்கஸ் துவக்கம்

பெருங்குடி ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 40 நாட்கள் நடைபெறும், ஜெமினி சர்க்கஸ் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதில், ஸ்டிக் பேலன்ஸ், கண் ஸ்பிரிங்கநெட், போன்ற ஒன்பது வகையான புதிய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சர்க்கஸ் உரிமையாளர் ஷாஜி லால் கூறியதாவது:

இந்தியாவின் 75 வருட பழமையானது ஜெமினி சர்க்கஸ் நிறுவனம். விலங்குகள் பயன்படுத்த தடை உள்ளதால், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ற பிற நிகழ்வுகள் மட்டும் நடைபெறும்.

ஒரு காட்சியில், 1,200 நபர்கள் அமரலாம். நீர் புகாத கூடாரமாக அமைக்கப்பட்டு உள்ளது. கோடை காலம் என்பதால், ஏர் கூலர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆப்பிரிக்கா, நேபாள நாடுகள், மேற்கு வங்கம், கேரளா மாநில கலைஞர்கள் என, 80க்கும் மேற்பட்ட கலைஞர்களால், சர்க்கஸ் நடத்தப்படுகிறது.

வார நாட்களில், 4:30, 7:30 மணி என, இருகாட்சிகள் நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், பகல் 1:00 மணிக்கு சிறப்பு காட்சி நடைபெறும்.

காட்சி கட்டணம் 150, 250, 350, 500ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, 89212 61017, 79070 89704 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *