மகனால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஏட்டு பலி
திரு.வி.க.நகர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சேகரன், 72; ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 55. மகன் தினகரன், 23.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான சேகரன், அடிக்கடி குடித்து வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். வழக்கம்போல, கடந்த 7ம் தேதி இரவு 12:30 மணியளவில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை, அவரது மகன் தினகரன் கண்டித்துள்ளார். அப்போது தினகரனும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், ஆத்திரம் அடைந்த தினகரன் பெல்ட்டால் தந்தையை அடித்துள்ளார். இதில் சேகரன் பலத்த காயமடைந்தார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று உயிரிழந்தார்.
திரு.வி.க.நகர் போலீசார், கொலை வழக்காக மாற்றி தினகரனை நேற்று கைது செய்தனர்.