டிவிசன் ஹாக்கி லீக் போட்டி ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் வெற்றி

சென்னை, சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.

வேளச்சேரி கிளப், எம்.சி.சி., – அடையார் யங்கஸ்ட், இந்திரா காந்தி உள்ளிட்ட 33 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் எட்டு குழுக்களாக பிரிந்து, லீக் முறையில் வார இறுதி நாட்களில் மட்டும் மோதுகின்றன.

நேற்று காலை 6:00 மணிக்கு நடந்த முதல் போட்டியில், ஜெய்ஹிந்த் கிளப் – பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் அணிகள் மோதின. அதில், 7 – 1 என்ற கணக்கில், ஜெய்ஹிந்த் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, 7:00 மணிக்கு நடந்த போட்டியில், சேப்பாக்கம் யங்கஸ்ட் அணி, 4 – 2 என்ற கணக்கில், ஸ்டார் ஆப் மேக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.

சேப்பாக்கம் வீரர்கள் சரவணன் இரண்டு கோல்கள்; சிவகுமார் மற்றும் ஜட்சன் கேப்ரியல் தலா ஒரு கோல் அடித்தனர்.

அதேபோல், 8:00 மணிக்கு, அபிபுல்லா மெமோரியல் – ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 8 – 2 என்ற கணக்கில் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *