மாநகராட்சி விளையாட்டு போட்டி எறிபந்தில் அசத்திய கவுன்சிலர்கள்
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நகரின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
போட்டியில், 74 கவுன்சிலர்கள் உட்பட, மொத்தம் 2,416 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.
நேற்று முன்தினம், பெண்களுக்கான எறிபந்து, டென்னிகாயிட், கோ கோ போட்டிகள், கண்ணப்பர் திடலில் நடந்தன.
அதில், கவுன்சிலர்களுகான எறிபந்தில், ‘பி’ அணியில் இடம் பெற்ற துர்காதேவி, சாந்தகுமாரி, சுபாஷினி ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். இரண்டாமிடத்தை, தேவி, பிருந்தா, பவித்ரா ஆகியோர் இடம் பெற்ற ‘ஏ’ அணி கைப்பற்றியது.
அதேபோல், கவுன்சிலர் டென்னிகாயிட் போட்டியில், தேவி மற்றும் பிருந்தா ஜோடி முதலிடமும், பவித்ரா மற்றும் சுபாஷினி ஜோடி இரண்டாடமிடத்தையும் பிடித்தன. துர்கா தேவி மற்றும் சாந்தகுமாரி ஜோடி மூன்றாம் இடத்தை வென்றது.
பணியாளர்களுக்கான எறிபந்து போட்டியில், மண்டலம் – 13 அணி முதலிடத்தை பிடித்தது. கோ கோ போட்டியில், ‘எல் அன் இ’ அணி முதலிடத்தை கைப்பற்றியது.
நேற்று காலை, மந்தைவெளியில் துவங்கிய டேபிள் டென்னிஸ் போட்டியில், ஐந்து கவுன்சிலர்கள் உட்பட 40 வீரர் – வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.