சென்னை பல்கலை உறுப்பு கல்லுாரி பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
சென்னை,சென்னை பல்கலையின் கீழ் உள்ள எட்டு, உறுப்பு மற்றும் தன்னாட்சி கல்லுாரி முதல்வர்களுக்கு, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் இளங்கோவன் வெள்ளைச்சாமி எழுதியுள்ள கடிதம்:
சென்னை பல்கலையின் அனைத்து உறுப்பு மற்றும் தன்னாட்சி கல்லுாரிகளுக்கும் சேர்த்து, 166வது பட்டமளிப்பு விழா, கடந்த ஆண்டு, செப்., 24ல் நடத்தப்பட்டது. அதன்படி, தன்னாட்சி, உறுப்பு கல்லுாரிகளுக்கான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான சான்றிதழ்களை, ஜனவரி முதல் வினியோகித்து வருகிறோம். இதுவரை, 52 கல்லுாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனாலும், பல்கலை நிர்வாக காரணங்களால், உங்கள் கல்லுாரி மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க இயலவில்லை. அதனால், மறு அறிவிப்பு வரும் வரை, நீங்கள் திட்டமிட்ட பட்டமளிப்பு விழாக்களை ரத்து செய்யுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.