வில்லிவாக்கம் கோசாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
வில்லிவாக்கம்:வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், 1.48 கோடி ரூபாயில், புதிய கோசாலை அமைக்கும் பணிக்கு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டினார்.
அதேபகுதியில், கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தக மையம் மற்றும் வில்லிவாக்கம் ஏரி தீம்பார்க் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின், அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ”அறநிலையத்துறைக்கு சொந்தமான அரை ஏக்கர் இடத்தில் நடந்து வரும் கோசாலை மைய பணிகள் முடிந்ததும், சாலையில் மாடுகள் சுற்றித்திரியாத நிலை ஏற்படும்,” என்றார்.
பின், மேயர் பிரியா அளித்த பேட்டி :
வில்லிவாக்கத்தில், 200 மாடுகள் பராமரிக்கும் வகையிலான கோசாலை மைய பணிகள், இரண்டு மாதங்களில் முடிக்கப்படும். வில்லிவாக்கம் ஏரிகொள்ளளவை, 10,000 எம்.எல்.டி.,யில் இருந்து, 12 லட்சம் எம்.எல்.டி.,யாக உயர்த்தும் பணிகள் நடக்கின்றன.
ஏரியில், கண்ணாடி பாலப்பணி நிறைவடைந்து விட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் திறப்பு தாமதமானது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.