விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரத்தில் வசித்தவர் பாரதி, 37; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷர்மிளா, 35.
இருவரும், நேற்று முன்தினம் இரவு, செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
புதுவாயல் அருகே, பின்னால் வந்த வேன், இவர்கள் மீது மோதியது. படுகாயமடைந்த பாரதி, பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
அவரது மனைவி ஷர்மிளாவின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.