படகு போட்டியில் வென்ற மீனவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

திருவொற்றியூர்: சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இயந்திர பைபர் படகு போட்டி, எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் கடற்கரையில் நடந்தது. பகுதி செயலாளர் வழக்கறிஞர் அருள்தாசன் தலைமை வகித்தார். தொடர்ந்து, 2 நாட்கள் நடந்த படகு போட்டியில் எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் 21 மீனவ கிராமங்களை சேர்ந்த 100 படகுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் இருந்து கடல் அலையில் சீறி பாய்ந்து சென்ற படகுகள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பின.

இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை துணை செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கனேசன், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், நிர்வாகிகள் கண்ணதாசன் சந்திரகுமார், ராம்குமார், நவக்குமார், ரஞ்சித், சக்கரவர்த்தி, கார்த்திக் ஞானசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், நரேன்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *