ஆலந்துார் , கத்திப்பாரா , காரப்பாக்கம் வழித் தடத்தில் மினிபஸ் இயக்க அனுமதி
சென்னை, சென்னையில், மே 1ம் தேதி முதல் தனியார் மினிபஸ் இயக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக மூன்று பேருக்கு, சென்னை மாவட்ட கலெக்டர், நேற்று ஆணை வழங்கினார்.
சென்னையில், 72 வழித்தடங்களில், தனியார் மினிபஸ் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மீனம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையின் கீழ், மூன்று வழித்தடங்களில் மினிபஸ் இயக்கப்படுகிறது. இதற்காக 23 பேர், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர்.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், குலுக்கல் முறையில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று, கலெக்டர் அனுமதி ஆணை வழங்கினார்.
தனியார் மினிபஸ், மே 1ம் தேதி முதல், மேற்கண்ட தடத்தில் இயக்கப்பட உள்ளது. அதற்கு முன், மீதமுள்ள வழித்தடங்களில், குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.
மூன்று வழித்தடங்கள்
வழித்தடம் மொத்த துாரம் பேருந்து வசதியில்லாத துாரம் பேருந்து வசதியுள்ள பகுதி ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் – கத்திப்பாரா (சர்குலர்) 10.5 7.2 3.3கத்திப்பாரா – மீனம்பாக்கம் 12.2 9.4 2.8காரப்பாக்கம் – இன்போசீஸ் 11.5 9.2 2.3