5வது சுற்று : தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியின் ‘சி’ பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா – பிரேசில் வீராங்கனை லிப்ரலோதோ ஆகியோர் மோதினர்
இந்த போட்டியில் கருப்பு நிற செஸ் காய்களுடன் களமிறங்கிய நந்திதா 32வது நகர்த்தலில் பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.