இளஞ்சிவப்பு ஆட்டோ ‘ 8ம் தேதி முதல் ஓடும்
சென்னை, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பெண் ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படும், ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’க்கள் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு ஜூனில், சட்டசபையில் அறிவித்தது.
முதற்கட்டமாக சென்னையில் வசிக்கும், 25 முதல் 45 வயதிற்குட்பட்ட, ஓட்டுநர் உரிமம் பெற்ற, 250 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் டி.என்.ஆட்டோ ஸ்கில்ஸ் நிறுவனம் சார்பில், ஆட்டோவை பாதுகாப்பான முறையில் இயக்குவது, அவசர காலங்களில் காவல்துறையை தொடர்பு கொள்வது, சுய தற்காப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி முடித்த மகளிருக்கு, ஒரு லட்சம் ரூபாய் மானியத்தில், ஆட்டோவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம், வரும் 8 ம் தேதி பயன்பாட்டிற்கு வருகிறது.