கடற்கரை – தாம்பரம் இடையே இன்றும் , நாளையும் 16 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, மார்ச் 6: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடந்து வருகிறது. இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை 16 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே செல்லும் 4 ரயில்கள், கடற்கரை – தாம்பரம் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் 5 ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.