வட சென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு
வடசென்னை பணிகள் அமைச்சர் ஆய்வு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், மாதவரம் நெடுஞ்சாலை ஜமாலியா பகுதியில் நடந்து வரும் புதிய குடியிருப்பு பணிகள், ராஜா தோட்டத்தில் நடந்து வரும் புதிய குடியிருப்பு திட்டப்பணிகள், கொளத்துார் பேப்பர் மில்ஸ் சாலையில் நடந்து வரும் பணிகள் என பலவற்றை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 6,039 கோடி ரூபாய் மதிப்பில், 82 பணிகள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டிய பணிகளை கள ஆய்வு செய்து வருகிறோம். இதுதவிர, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 975 கோடி ரூபாயில், 45 பணிகள் நடந்து வருகின்றன.
கொளத்துார் தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில், சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைந்து, வட்டாட்சியர் அலுவலகம், படிப்பகம் ஆகியவை அமைய உள்ளது.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.