மார்ச் 1ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
பல்லாவரம், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, பல்லாவரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., – எல்.எல்.ஏ., கருணாநிதி ஏற்பாட்டில், கட்சி கொடியேற்றம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நேற்று முன்தினம், பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில், கட்சி கொடி ஏற்றி, உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதைதொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், மார்ச் 1ம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு, எம்.எல்.ஏ., கருணாநிதி ஏற்பாட்டில், அமைச்சர் அன்பரசன், நேற்று காலை தங்க மோதிரம் அணிவித்தார்.
தொடர்ந்து, பிரசவித்த தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம், பழம், பிரட் உள்ளிட்ட பொருட்களையும், அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கருணாநிதி, இரண்டாவது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பல்லாவரம் தெற்கு பகுதி செயலர் பெர்னாட், செம்பாக்கம் வடக்கு பகுதி செயலர் கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.