ரூ.1,243 கோடியில் முறைகேடா?
ரூ.1,243 கோடியில் முறைகேடா?
திருவொற்றியூர், மணலி, மாதவரம்,தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள, 285 கழிப்பறைகளை 380.50 கோடி ரூபாயிலும், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் உள்ள 395 கழிப்பறைகளை 467.99 கோடி ரூபாயிலும் பராமரிக்க, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 322 கழிப்பறைகள், 395.35 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1,243.84 கோடி ரூபாய் மதிப்பில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியாரிடம் ஒப்படைப்பது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என, புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:பழுதடைந்த கழிப்பறைகளை ஓராண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும். அவற்றை, எட்டு ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். தினமும், காலை, மாலை நேரங்களில் கழிப்பறையை சுத்தப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.