சென்னையில் ரவுடி கொலை
செ்னை:சென்னைஅண்ணா நகர், அன்னை சத்யா நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் பழைய குற்றவாளி சின்ன ராபர்ட், 28. நேற்று மாலை, 7:15 மணியளவில், அன்னை சத்யா நகர், இரண்டாவது தெருவில் நடந்து சென்றார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், சின்ன ராபர்ட்டை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
அங்கிருந்தோர், அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர், 8:30 மணியளவில் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.\
ராபர்ட்டை வெட்டிய அதே கும்பல், சில மணிநேரத்திற்கு முன், அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பில்உள்ள ரேவதி, 32 என்பவரை வீட்டிற்குள் புகுந்து, தலையில் வெட்டி, கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த ரேவதி, தலையில் 10 தையல் போடப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.