கோபாலபுரத்தில் பாக்சிங் அகாடமி திறந்து வைத்தார் முதல்வர்
சென்னைஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கோபாலபுரத்தில், 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.\
இதில், 890 பேர் அமரும் வகையிலான பார்வையாளர் மாடம், முற்றிலும் குளிரூட்டப்பட்ட உள் அரங்கம், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சியாளர் அறை, மருத்துவர் அறை, நிர்வாக அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளன.
திறப்பு விழாவை தொடர்ந்து, பிளைவெயிட் பிரிவில், 48 முதல் 51 கிலோ எடை பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டி நடந்தது. வெற்றிபெற்ற வீராங்கனைக்கு, முதல்வர் ஸ்டாலின், கோப்பையை வழங்கி பாராட்டினார்.