வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆன்லைன் டெலிவரி ஊழியர் மர்மச்சாவு
சென்னை: பெரியமேடு பகுதியில் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்தார்.சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (23). இவர், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். பரத்குமார் தனது சகோதரர் கட்டுப்பாட்டில் வசித்து வந்தா
இதற்கிடையே பரத்குமார் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி வாயில் நுரை தள்ளிய நிலையில் உடல் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த பரத்குமார் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது சகோதரர் உடனே பரத்குமாரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் பரத்குமார் இறப்பு குறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் பரத்குமார் இறப்பு குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.