தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலக முகப்பில் இந்தி எழுத்து அழிப்பு
ஆலந்தூர்: ஒன்றிய அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில உள்ள பரங்கிமலை தலைமை தபால் நிலையம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முகப்பில் உள்ள போர்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் பெயர் பலகை எழுதப்பட்டிருந்தது. தமிழிலும் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலந்தூர் பகுதி திமுக பகுதி பிரதிநிதி கார்த்திக் தலைமையில் திமுகவினர் தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷமிட்டபடி வந்து கருப்பு நிற பெயின்ட் கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தனர்.