மெத் ஆம் பெட்டமைன் விற்ற 2 பேர் கைது
சென்னை:ஆயிரம் விளக்கு பகுதியில், மெத் ஆம்பெட்டமைன் விற்கப்படுவதாக, ஏ.என்.ஐ.யு., எனப்படும் சென்னை காவல் துறை, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் ரகசிய விசாரணை நடத்தி, கோடம்பாக்கம் பூபதி நகரைச் சேர்ந்த விக்னேஷ், 22, அம்பத்துார் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஹரிநாத், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 1.5 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஐ போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.