பொது தேர்வு மாணவர்களுக்கு மாங்காடு கோவிலில் ஹோமம்

குன்றத்துார்,:சென்னை மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

இங்கு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற நேற்று காலை,9:00 மணிக்கு ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம் நடந்தது.

தேர்வுக்கு தேவையான எழுது பொருட்களை பூஜையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு, மாணவர்களிடம் வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *