மாடியில் இருந்து குதிக்க முயன்ற மூதாட்டி வேதனை
கீழ்ப்பாக்கம் காவல் எல்லையான, புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா, 72.
இவர், நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில், அவரது வீட்டின் முதல் மாடியில் இருந்து குதிக்க முயன்றார்.
தகவலறிந்து வந்த, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், நிர்மலாவை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து, நிர்மலா கூறுகையில், ”1930ல் இருந்து, மூன்று தலைமுறையாக இதே வீட்டில் வசிக்கிறேன்.
எங்களது சொத்துகளை ஏமாற்றி சிலர் பறித்துக் கொண்டதால், அதை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடுகிறேன்.
”என்னை மனநலம் பாதித்தவளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்; நான் மனநலம் பாதிக்கப்படவில்லை, நன்றாக இருக்கிறேன்,” என்றார்.