கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 20 ரயில்கள் ரத்து

சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளைக்கு 20 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

 ↓சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி நாளை காலை 8:05, 9:00, 9:30, 10:30, 11:35, சூலுார்பேட்டைக்கு காலை 8:35, காலை 10:15 மற்றும் கடற்கரை – கும்மிடிப்பூண்டி காலை 9:40, நண்பகல் 12:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

 ↓கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் காலை 9:55, 11:25, நண்பகல் 12:00 மதியம் 1:00, 2:30, மாலை 3:15 மணி ரயில்களும், கும்மிடிப்பூண்டி – கடற்கரைக்கு காலை 10:55 செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது

 ↓சூலுார்பேட்டை – சென்ட்ரல் காலை 11:45, மதியம் 1:15 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது

ஒரு பகுதி ரத்து

 ↓செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி நாளை காலை 9:55 மணி ரயிலும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மாலை 3:00 மணி ரயிலும், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்

இதையடுத்து சென்ட்ரல் – பொன்னேரி தடத்தில் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

சூலுார்பேட்டை ரயில் ரத்து

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் – சூலுார்பேட்டை தடத்தில், மூன்று நாட்களுக்கு ஐந்து மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்ட்ரல் – ஆந்திரா மாநிலம் கூடூர் தடத்தில் நாயுடுபேட்டை ரயில் நிலையம் அருகில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், நாளையும், 27ம் தேதி மற்றும் மார்ச் 1ம் தேதிகளில், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிக்னல் கோளாறால் பாதிப்பு

சென்னை புறநகரில் சென்னை சென்ட்ரல் — அரக்கோணம் வழித்தடத்தில் தினமும் இயக்கப்படும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த தடத்தில் வியாசர்பாடி ஜீவா – பேசின்பாலம் இடையே ரயில் பாதையில், நேற்று காலையில் திடீரென சிக்னல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து, சிக்னல் கோளாறு சரிசெய்யும் பணி நடந்தது.

இந்த தடத்தில் காலை 9:55 முதல் 10:25 மணி வரை, சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர். ரயில்வே பணியாளர்கள் அரைமணி நேரத்தில் சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதையடுத்து, மின்சார ரயில் சேவை மீண்டும் சீரானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *