தாயை கொன்ற மகனுக்கு சிறை
சென்னை, வேளச்சேரி திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 52. இவரது மகன் மூர்த்தி, 31. மதுப்பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி, 2021 செப்., 19ல், குடிக்க பணம் கேட்டு, தந்தை ராமலிங்கம், தாய் லட்சுமி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பெற்றோர் மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மூர்த்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தாய் லட்சுமியை குத்தி கொலை செய்தார். வேளச்சேரி போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.