போதையில் போலீசை தாக்கிய வாலிபர் கைது
சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போதையில் ஒருவர் ரகளை செய்வதாக நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து, சுரேஷ், ராஜ்குமார் ஆகிய இரு போலீஸ்காரர்கள் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை தட்டிக்கேட்டனர்.
அப்போது, போதையில் இருந்த அந்த வாலிபர், போலீஸ்காரர்களை தாக்கியுள்ளார். அதனால், அவரை ரோந்து வாகனத்தில் ஏற்றி வந்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
அதில் அவர், காரைக்காலைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 23, என்பதும், சென்னைஅண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில், யு.பி.எஸ்.சி., தேர்வுக்காக பயின்று வந்ததும் தெரியவந்தது. நேற்று, தமீம் அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.