சிறுமியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை,அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 12 வயதுள்ள ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் தேதி வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அவ்வழியே ஆட்டோவில் வந்த ஓட்டுநர், மாணவியின் கையை பிடித்து இழுத்து, அநாகரிகமாக நடக்க முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி பள்ளிக்கு சென்ற சிறுமி, வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததை தெரிவித்து உள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடையாறு, தாமோதரபுரம் பிரதான சாலையைச் சேர்ந்த தங்கராஜ், 56, என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றன