ஆவடியில் குடியிருப்புவாசிகள் ஆரவாரம் ‘டிரெண்டிங் ‘ ஆகிறது அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்
ஆவடி: அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை ஒன்றிணைக்கும் வகையில் தினமலர் நாளிதழ் முன்னெடுத்தது தான், ‘அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்’ நிகழ்ச்சி.
நிகழ்ச்சிக்கு உறுதுணையாக, ‘கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், நிசான், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், குருதேவ் ஸ்கோடா, போகா ஈவென்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைகோர்த்து நடத்தி வருகின்றன.
நேற்று ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சுதர்சனம் சாலையில் உள்ள ‘வி.ஜி.என் ஸ்டாப்போர்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில், பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நிகழ்ச்சி நடந்தது. குடியிருப்புவாசிகளின் உற்சாகத்தால் குடியிருப்பு வளாகம் திருவிழாக்கோலம் பூண்டது.
இந்நிகழ்வில், கோலப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மாரத்தான், ஆடல், பாடல் நிகழ்ச்சி, சிறுவர் விளையாட்டு, மேஜிக் ஷோ, உறியடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகமாக பங்கேற்று வார இறுதி நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
‘தினமலர்’ நாளிதழின் ‘கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்’ குடியிருப்பு வாசிகளின் ஆரவார ஆனந்தத்தால், வெற்றி நடைபோட்டு வருகிறது. தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக ‘அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்’ மாறியுள்ளதாக குடியிருப்பு வாசிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று, இனிமையாக பொழுதை கழித்தனர். ‘தினமலர்’ நாளிதழ் நடத்தும் இந்த நிகழ்ச்சி, வரும் காலங்களில் ஒரு ‘டிரெண்ட் செட்’ நிகழ்ச்சியாக மாறும்.
அப்பார்ட்மென்ட் நிகழ்ச்சி அருமையாக இருந்தது. ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளையும், ‘என்ஜாய்’ செய்து விளையாடினோம். நிறைய ‘ஸ்டால்’ இருந்தது. ‘ஸ்னாக்ஸ்’ வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தோம்.
– கேலின், சிறுமி.
வார இறுதி நாட்களில் வெளியில் சென்று பொழுதை வீணாக்காமல் நல்ல ஜாலியாக இருந்தோம். ‘கிட்ஸ்’சுக்கு நிறைய போட்டிகள் நடந்தன. குடும்பத்துடன் ‘அவுட்டிங்’ போனது போன்று ‘செமையா’ இருந்தது.
– வர்ஷா, சிறுமி.
‘தினமலர்’ நாளிதழ் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, நல்ல பொழுதுபோக்கு நிகழ்வாக இருந்தது. இந்த கொண்டாட்டத்தின் வாயிலாக, அக்கம் பக்கத்தினரை ஒரே இடத்தில் சந்தித்து, பேசிய தருணம் நல்ல அனுபவமாக இருந்தது.