சேலையில் தீப்பிடித்து மூதாட்டி ‘ சீரியஸ் ‘
ஓட்டேரி, ஓட்டேரி, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் மதனவள்ளி, 85. இவர், தன் 3வது மகள் அமுதாவுடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்குமுன் மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, வீட்டின் மின் இணைப்பை மின்வாரியத்தினர் துண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தபோது, மூதாட்டியின் புடவையில் மெழுகுவர்த்தி பட்டு தீப்பிடித்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.