மாடியில் இருந்து விழுந்த கட்டட தொழிலாளி பலி
மதுரவாயல்,எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 54; கட்டட தொழிலாளி. போரூர் சமயபுரத்தில், இரண்டு மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 5ம் தேதி, மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர் டேங்கில் வேலை செய்தபோது, அங்கிருந்து தவறி இரண்டாவது தளத்தில் விழுந்தார்.
இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயசீலன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என, ஜெயசீலனின் சகோதரர் அந்தோணிசாமி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, கட்டட மேஸ்திரி செல்வம் மற்றும் கட்டட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.