காங்., நுாதன ஆர்ப்பாட்டம்
சென்னை, அமெரிக்காவில் வசித்து வந்த, 104 இந்தியர்கள், கை, கால்களில் விலங்கிட்டு வெளியேற்றப்பட்ட விவகாரத்தில், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டதாகவும், காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவை, மத்திய அரசு கண்டிக்க வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கை, கால்களில் விலங்கிட்டு, தரையில் அமர்ந்து காங்கிரசார் நுாதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்