வேளாண் மையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி
சென்னை, சென்னை, கிண்டி திரு.வி.க., தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிற்சி மையத்தில், வரும் 13ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சியும், 14ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
இதில், காளான் வளர்ப்பு, அறுவடை, சந்தைப்படுத்துதல் குறித்தும், தேனீ வளர்ப்புக்கான சாதனங்கள், பராமரிப்பு நுட்பங்கள், தேன்சார் பொருட்களின் அறுவடை, சேகரித்தல், பதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 044 – 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.