சோழிங்கநல்லூரில் ஏஐ மையம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்
தாம்பரம்: சோழிங்கநல்லூரில் ஏஐ மையத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இக்னிதோ டெக்னாலஜிஸ் இன்க் ஒரு முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் டிஜிட்டல் பொறியியல் நிறுவனம், சென்னையில் உள்ள தனது இந்திய ஏஐ மையத்தை பெரியளவில் விரிவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய விரிவாக்கப்பட்ட ஏஐ வசதியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். இக்னிதோ அடுத்த 2 ஆண்டுகளில் ஏஐ திறன்களை மையமாகக் கொண்டு தனது குழுவின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
விரிவாக்கம் இக்னிதோவின் உக்திசார் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் புதிய மையம் எல்எல்எம்கள், மெஷின் லேர்னிங் மற்றும் ஜெனரல் ஏஐ போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, அதிக செயற்கை நுண்ணறிவு முகவர்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.