கணக்காளர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
ஆவடி,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்படையில், கணக்காளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு, வணிகவியல் அல்லது கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை, https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குள், ஆலந்துாரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.