தோழிபோல் பேசி முதியவரிடம் ‘ஆட்டை’
அண்ணா நகர்: அண்ணாநகர், 11வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராம்குமார், 60. இவருக்கு, நேற்று முன்தினம், ‘வாட்ஸாப்’பில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், எதிர்முனையில் பெண் குரலில் பேசியவர், 1977ல் தன்னுடன் படித்த, ரோகிணி அறிமுகமாகியுள்ளார்.
சில மணிநேரம் பேசிய பின், தனக்கு அவசரமாக 27,000 ரூபாய் தேவை இருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். இதை நம்பிய ராம்குமார், அதே எண்ணிற்கு, ‘கூகுள் பே’ வாயிலாக, பணத்தை அனுப்பிஉள்ளார்.
பின், அந்த எண்ணை அழைத்த போது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராம்குமார், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.