வீட்டை உரசி செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து

மாதவரம் மண்டலம், 26வது வார்டுக்குட்பட்ட அலெக்ஸ் நகர் ஏ காலனி 2வது தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், மின்கம்பிகள் வீட்டை உரசியபடி செல்கின்றன.

இதுகுறித்து பலமுறை கூறியும் மாதவரம் மின் வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர்பலி அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மின் கம்பங்களை இடம் மாற்றி பிரச்னையை சரி செய்யலாம். அல்லது புதைமின் வட இணைப்பை மாற்றித்தரலாம். இது எதையும் செய்ய மின்வாரியத்தினர் முன்வரவில்லை. மின் கம்பியில் பைப் மட்டும் போட்டுச் செல்கின்றனர்.

– பகுதிவாசிகள், அலெக்ஸ் நகர், மாதவரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *