கூலி தொழிலாளியை தாக்கிய பெண்கள் கைது
வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 22. கூலி தொழிலாளி.
இவர், கடந்த 12ம் தேதி நள்ளிரவு, தன் வீட்டருகே நின்றிருந்த போது, அங்கு வந்த இருவர், பாலமுருகனிடம் வீண் தகராறு செய்து தாக்கினர். இதை தடுக்க முயன்ற பாலமுருகனின் தந்தை கணேசனும் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்தது தெரிந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்த பிரவீனா, 33, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த வளர்மதி, 41, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர்.