சித்த மருத்துவ கண்காட்சியில் இலவச மருத்துவ பரிசோதனை

சென்னை:ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் சார்பில், எட்டாவது சித்த தினத்தையொட்டி, கோட்டூர்புரம், பி.எம்.பிர்லா கோளரங்க வளாகத்தில், மாபெரும் சித்த மருத்துவ கண்காட்சி துவங்கியுள்ளது.

வரும் 9ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில், காலை 10:00 மணி முதல் 6:00 மணி வரை, பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

இந்த கண்காட்சியில், பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், சித்த மருத்துவத்தில் உள்ள நன்மைகள், மூலிகை செடிகள், உணவு வகைகள் உள்ளிட்டவை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *