692 கோடி ஊழல்! சிக்கும் எடப்பாடி !.. அறப்போர் இயக்கம் புகார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற சாலை டென்டரில் எடப்பாடி அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, செட்டிங் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார்.
நெடுஞ்சாலைத்துறையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே பெரும்பாலும் நிர்ணயிக்கப்படும் வேளையில், 2 கோடி நிர்ணயித்து எடப்பாடி அவர்களின் நெருங்கிய உறவினர்கள் நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டை கூறுகின்றனர். மேலும் இந்த செட்டிங் டெண்டர் தொடர்பாக இரண்டு முறை புகார் கொடுத்து டெண்டர் ரத்து செய்யப்பட்டு மீண்டும் குறிப்பிட்ட கால அவகாசம் இல்லாமல் நாளிதழில் விளம்பரம் இல்லாமல் மோசடியாக டெண்டர் விட்டு அரசுக்கு பெரிய அளவு இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய சொல்லி வலியுறுத்தியுள்ளனர். விரைவில் இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.