புழல் மத்திய சிறையில் வாகனங்கள் பொது ஏலம்

 சென்னை: புழல் மத்திய சிறையில் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுவதாக மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய சிறைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல் மத்திய சிறை 2ல் உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான பழைய வாகனங்களை கண்டம் செய்வதற்கான பொது ஏலம் மூலம் தீர்வு செய்திடும் பொருட்டு வரும் 13ம் தேதி காலை 11 மணியளவில் சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், டெபாசிட் தொகை ரூ.500 மட்டும் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தொகை ஏல தினத்தன்று காலை 11 மணிக்குள் சிறை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். தொகை செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் முடிவடைந்தவுடன் ஏலம் எடுக்காதவர்களின் டெபாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படும். ஏலத்தில் கோருகின்ற அதிகபட்ச ஏலத் தொகையை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச ஏலம் கோருகின்றவருக்கு ஏலம் கேட்கப்படும் வாகனத்தை சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநரின் அனுமதி ஆணை பெறப்பட்ட பின்னர் வழங்கப்படும். குறிப்பிட்ட தினத்தில் ஏலத்தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளாவிட்டால், டெபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படுவதோடு அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புத்தொகையினையும் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து வசூலிக்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் வாகனத்தை சிறை அலுவலக நாட்களில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை கண்காணிப்பாளரின் முன் அனுமதி பெற்று துணை சிறை அலுவலர், சிறை அலுவலர் முன் பார்வையிட்டு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *