தொழில் முனைவோராக ‘மாஜி ‘ வீரர்களுக்கு அழைப்பு
சென்னை,முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர் தொழில் முனைவராக உருவாக்கும் வகையில், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
இத்திட்டத்தில், தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் மரணமடைந்த வீரரின் கைம்பெண்கள், சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது