கோயம்பேடில் லாரி மோதி கூலித் தொழிலாளி பலி
கோயம்பேடு,கோயம்பேடு சந்தையில், மூட்டை துாக்கும் கூலி தொழிலாளி, எட்டியான், 72. நேற்று அதிகாலை, கோயம்பேடு ‘சி’ சாலையில் உள்ள கீரை சந்தை பகுதியில், மூட்டை துாக்கி கொண்டு நடந்து சென்றார்
அப்போது, பின்னால் வந்த லாரி, எட்டியான் மீது மோதியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.