புகார் பெட்டி மதுக்கூடமாக மாறிய குளக்கரை கவுன்சிலர் பெயரை கூறி மிரட்டல்
சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், 1.25 ஏக்கர் பரப்பு கொண்ட அனுமான் குளம் உள்ளது. அருகில், சமீபத்தில் ஒரு டாஸ்மாக் திறக்கப்பட்டது.
இந்த குளத்தின் படியில் அமர்ந்து, பலர் மது குடிக்கின்றனர். மது பாட்டில்களை அங்கே உடைத்து எறிந்து விட்டு, தின்பண்ட கழிவுகளை குளத்தில் வீசுகின்றனர்.
இருட்டான பகுதியானதால், இரவு முதல் அதிகாலை வரை அமர்ந்து மது அருந்துகின்றனர். குளத்தை நாசப்படுத்தாதீர்கள் என, தட்டிக்கேட்டால் கவுன்சிலர் பெயரை கூறி மிரட்டுகின்றனர்.
ரோந்து போலீசார் பார்த்தும், நடவடிக்கை எடுப்பதில்லை. யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, குளத்தை பாதுகாக்க வேண்டும்.
– ராஜ்குமார்,ஈஞ்சம்பாக்கம்.