இருவர் உறுப்பு தானம்: 16 பேர் மறு வாழ்வு
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக, போரூர் ராமசந்திராமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்தது; மூளைச்சாவு அடைந்தார்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசுந்தரி, 52, என்பவர் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்டு, நினைவற்ற தன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவரும் மூளைச்சாவு அடைந்தார்.
இவர்களின் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக அளித்தனர்.
இதையடுத்து, நான்கு சிறுநீரகங்கள், இரண்டு கல்லீரல்கள், இரண்டு கணையங்கள், இதய வால்வுகள், ஒரு சிறுகுடல், வயிற்றுப்பகுதி, நான்கு கருவிழிப்படலங்கள் என ௧௬ பேருக்கு, மறுவாழ்வு கிடைத்துள்ளது.