விபத்தில் சிக்கிய மாணவர் பலி
ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் அருகே, காந்துார் கிராமம் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜி, 16; பிளஸ் 1 மாணவர்.
கடந்த 16ம் தேதி, சகோதரர் லோகேஷுடன், ‘பஜாஜ் சிடி100’ இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து காந்துார் சென்றார்.
மொளச்சூர் அருகே, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி, இருவரும் விழுந்தனர். இதில், ராஜியின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது;
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் ராஜி உயிரிழந்தார்.